Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`அடக்குமுறைக்கு ஒடுங்கி விளையாட்டை ரசிக்கப்போறியா?’ ஜி.வி.பிரகாஷ் ட்வீட்!

அடக்குமுறைக்கு அஞ்சி ஒடுங்கி, விளையாட்டை ரசிக்கப்போறியா... என்று சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகுறித்து  நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டங்கள் வலுவடைந்துவருகின்றன. தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்திவருகின்றன.  கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகர் சங்கம் ஒருங்கிணைந்த போராட்டத்தில், பெரும்பாலான நடிகர்கள் கலந்துகொண்டனர்.

ஜி.வி.பிரகாஷ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் சூழலில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவிருக்கும் ஐபிஎல் டி20 போட்டியை நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் வலியுறுத்திவருகின்றன. ஆனால், திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்று ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். இன்று நடைபெறவிருக்கும் போட்டியைக் காணவரும் ரசிகர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மைதானம் அமைந்திருக்கும் பகுதியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், ``அடக்குமுறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்கப் போறியா? சுதந்திரமா உன் கருத்தைச் சொல்ல முடியலன்னா விளையாட்டை தவிர்க்கப் போறியா? தடையைத் தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்கச் சொல்லப்போறியா?” என்று பதிவிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement