வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (10/04/2018)

கடைசி தொடர்பு:10:10 (10/04/2018)

1-ம் வகுப்பு சேர்க்கைக்கு 1 லட்சம் ரூபாய்! - சென்னை கேந்திரிய வித்யாலயா  பள்ளி முதல்வர் கைது

பள்ளி முதல்வர்

சென்னையில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரை சி.பி.ஐ கைது செய்தது. 

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் தொடங்கியது. ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு  இணையதளம் மூலம் மக்கள் விண்ணப்பித்து வந்தனர்.  இந்நிலையில், சென்னை அசோக்நகரில் இயங்கிவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஆனந்தன்,  ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பெற்றோரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கேட்டது பற்றி மாணவனின் பெற்றோர் சி.பி.ஐ-க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இன்று காலை பள்ளி வளாகத்தில் இருக்கும் முதல்வர்  வீட்டில் வைத்துப் பெற்றோர் லஞ்சம் கொடுத்தபோது சி.பி.ஐ ஆனந்தனைச் சுற்றிவளைத்தனர். இதையடுத்து, அவரை சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க