சல்மான்கான், அமீர்கான், ஷாருக்கான் வரிசையில் அப்துல் கலாமா? - `மெஹ்பூபா' ட்ரெய்லர் அட்ராசிட்டி | theatrical trailer of Puri Jagannadh's film 'Mehbooba'

வெளியிடப்பட்ட நேரம்: 08:43 (10/04/2018)

கடைசி தொடர்பு:10:40 (10/04/2018)

சல்மான்கான், அமீர்கான், ஷாருக்கான் வரிசையில் அப்துல் கலாமா? - `மெஹ்பூபா' ட்ரெய்லர் அட்ராசிட்டி

டோலிவுட்டின் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் மகன் அகாஷ் பூரி கதாநாயகனாக அறிமுகம் ஆகும் 'மெஹ்பூபா ' தெலுங்கு படத்தின் டிரய்லர் நேற்று வெளியானது.

டோலிவுட்டின் பிரபல இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கியுள்ள புதிய தெலுங்கு திரைப்படம், `மெஹ்பூபா'. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.

பூரி ஜெகந்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி கதாநாயகனாக அறிமுகம் ஆகும் இப்படத்தில், நேஹா ஷெட்டி கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமாகிறார். டீஸரின் ஆரம்பமே, "தேசிய எல்லையில் நிற்கும் வரை எந்த ராணுவ வீரனையும் யாரும் காதலிப்பதில்லை" என ஆரம்பிக்கிறது. காஷ்மீர் எல்லையில் ஒரு கனத்த காதல் கதையாக இருக்குமோ என்ற எண்ணமும் வரும் வகையில் சேஸிங், ரன்னிங் காதல் காட்சிகள் காட்டப்படுகின்றன. ஒரு காட்சியில், "சல்மான் கான் சிந்தாபாத், ஷாருக் கான் சிந்தாபாத், அமீர் கான் சிந்தாபாத், அப்துல் கலாம் சிந்தாபாத் " என ஒரு பெரிய கூட்டத்தின் முன்பு மண்டியிட்டுக் கூறி, அட்ராசிட்டி செய்கிறார்  ஆகாஷ் பூரி.

மெஹ்பூபா

இருப்பினும்,  துப்பாக்கி, பீரங்கி, ஹெலிகாப்டர் என போர்க் காட்சிகள் நிறைந்த ஆக்‌ஷன் படமாக இருக்கும் என நம்புவோம். மே 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.