`இனி நாங்களே பார்த்துப்போம்!’ - தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி மூவ் #TamilCinemaStrike

டிஜிட்டல் தொழில்நுட்ப வழங்குநர்கள் 'மாஸ்டரிங்' எனப்படும் திரைப்பட திரையிடலுக்கேற்ற இறுதிக்கட்டப் பணிகளை தனித்தனியே செய்து வந்தனர்.  இந்நிலையில் இனி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமே சொந்த முறையில் இந்த மாஸ்டரிங் என்ற பணியை மேற்கொள்ளவுள்ளனர் தயாரிப்பாள்ர் சங்கம்

கியூப், யூ.எஃப்.ஓ முறையற்றக் கட்டண உயர்வைக் கண்டித்து, தென்னிந்தியத் திரையுலகம் ஆரம்பித்த போராட்டம், ஓரிரு வாரங்களில் நடந்த சில பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கேரளா, கர்நாடகா, ஆந்திரா வெளியேறியது. இதன்பிறகு, இன்று தமிழ்த் திரைப்படத்துறை மட்டும் ஒற்றை ஆளாக இந்த வி.பி.எஃப் கட்டண விவகாரத்தில் போராடிவருகிறது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப வழங்குநர்கள் 'மாஸ்டரிங்' எனப்படும் திரைப்படம்  திரையிடலுக்கேற்ற இறுதிக்கட்டப் பணிகளைத் தனித்தனியே செய்துவந்தனர். 
 

தயாரிப்பாளர் சங்கம்
 

இந்நிலையில், இனி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமே சொந்த முறையில் இந்த மாஸ்டரிங் என்ற பணியை மேற்கொள்ள டிசிஐ   2 k , 4k புரொஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்கிவரும் கோவையைச் சேர்ந்த மைக்ரோ ப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்மூலம், தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அனைத்துப் படங்களுக்கும் மாஸ்டரிங் செய்யப்பட்டு, அனைத்துத் தியேட்டர்களுக்கும் நேரடியாகப் படங்கள் கொடுக்கப்படும். இனி தயாரிப்பாளர்கள் விரும்பும் திரையரங்குகளுக்கு மட்டும் படங்களைத் தரலாம் என்ற நிலைமை இனி உருவாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!