கேலிக்கூத்தாகும் உண்ணாவிரதப் போராட்டங்கள்... காலை உணவு சாப்பிடும் காங். தலைவர்கள்!

டெல்லியில் உண்ணாவிரதத்துக்கு செல்லும் முன் காங்கிரஸ் தலைவர்கள் உணவு சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர்.

ண்ணாவிரதம் என்றாலே, விடுதலைப்புலி திலீபன் நினைவுக்கு வருவார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 11 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர், திலீபன். தற்போதோ... உண்ணாவிரதங்கள் கேலிக்கூத்தாகி வருகின்றன. காவிரி விவகாரத்துக்காக அ.தி.மு.க-வினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம், பல இடங்களில் உண்ணும்விரதமாக மாறியது. 'ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இப்படியெல்லாம் அ.தி.மு.க-வினர் நடந்துகொள்வார்களா?' என்று அ.தி.மு.க தொண்டர்களே  வருத்தமும் வேதனையும் அடைந்தனர். தற்போது, அ.தி.மு.க-வினர் போலவே டெல்லியில் உண்ணாவிரதத்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ளனர். 

அஜய் மாக்கன் உணவு அருந்துகிறார்.

எஸ்சி, எஸ்டி மக்கள் மீதான தாக்குதல்,  மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக்  கண்டித்து, காங்கிரஸ் கட்சி நேற்று உண்ணாவிரதம் அறிவித்திருந்தது. டெல்லி ராஜ்காட்டில் நடந்த உண்ணவிரதத்தில்,  ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். 

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர்  அஜய் மாக்கன் , அர்விந்தர் சிங் லவ்லி ஆகியோர் உண்ணாவிரதம் தொடங்குவதற்கு முன், ஹோட்டல் ஒன்றுக்குச் சென்று,  காலை உணவை ஒரு பிடி பிடித்தனர். உண்ணாவிரதத்துக்கு முன், காங்கிரஸ் தலைவர்கள் உணவு உண்ணும் புகைப்படத்தை சில மீடியாக்கள் வெளியிட்டன. பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள், 'காங்கிரஸ் கட்சி மக்களை முட்டாளாக்குகிறது'' என்று விமர்சித்தனர். 

இதுகுறித்து அர்விந்தர் சிங் லவ்லியிடம் மீடியாக்கள் கேள்வி எழுப்பியபோது,  உண்மையை ஒப்புக்கொண்டார். ''நாங்கள், காலை 8 மணிக்கு முன்னதாக உணவு சாப்பிட்டோம். காலவரையற்ற உண்ணாவிரதம் இல்லை. இது ஒரு அடையாள உண்ணாவிரதம்தான்'' என்று அவர் பதில் அளித்தார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!