வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (10/04/2018)

கடைசி தொடர்பு:11:51 (10/04/2018)

`அண்டை நாட்டில் உளவாளி ஆலியா!’ - 'ராஸீ' ட்ரெய்லர்

ல்வார்' படத்தை இயக்கிய இயக்குநர் மேக்னா குல்ஸார் இயக்கத்தில் காஷ்மீரி பெண்ணாக ஆலியா பட் நடிக்கும் படம்  'ராஸீ'.

ஆலியா

'தல்வார்' படத்தை இயக்கிய இயக்குநர் மேக்னா குல்ஸார் இயக்கத்தில், காஷ்மீர் பெண்ணாக ஆலியா பட் நடிக்கும் படம்  'ராஸீ'. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. ஆலியாவுக்கு  ஜோடியாக, பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடிக்கிறார்.  1971 இந்தியா- பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தான் ராணுவ அதிகாரியை மணந்து  இந்தியாவுக்கு உளவுத் தகவலைக் கொடுத்த ஒரு வீரப் பெண்மணியின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தழுவி, முன்னாள் ராணுவ அதிகாரியும்  எழுத்தாளருமான ஹரிந்தர் சிக்கா எழுதிய 'காலிங் ஷெமத்' என்ற நாவலை அடிப்படையாகக்கொண்டு,  'ராஸி 'உருவாக்கப்பட்டிருக்கிறது. மே 11-ம் தேதி, இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்படுகிறது.