வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (10/04/2018)

கடைசி தொடர்பு:13:20 (10/04/2018)

டோல்கேட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்! இலவசமாகச் செல்லும் வாகனங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட்டை முற்றுகையிட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட்டை மாணவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். மேலும், அந்த மாணவர்கள் வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்யாமல் அனுப்பி வைத்து வருகின்றனர்.

டோல்கேட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்! இலவசமாக செல்லும் வாகனங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பாகத் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தென்னலூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்ய முடியவில்லை. அனைத்து வாகனங்களும் வரி செலுத்தாமல் டோல்கேட்டை கடந்து செல்கின்றன.

தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் அவர்களை ஓரமாக நிறுத்தி சமாதானப்படுத்தி வருகிறார்கள். கறுப்புச்சட்டை அணிந்து வந்த கல்லூரி மாணவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தால் சுங்கச்சாவடியில் சுங்கவரி வசூல் செய்யாமல் வாகனங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க