மாட்டு வண்டியில் வலம் வந்த ஸ்டாலின்! நடைப்பயணத்தில் சில காட்சிகள் 

ஸ்டாலின் நடைபயணம்

காவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திருவாரூரில் இன்று மாட்டு வண்டியில் வலம் வந்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்புப் பயணம் இன்று 4-வது நாளாக திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள தனது வீட்டிலிருந்து கமலாலயக்குளக்கரைக்கு நடந்து வந்த ஸ்டாலின், பின்னர் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பவித்திராமாணிக்கத்தில் பள்ளி மாணவர்களைச் சந்தித்தார்.

மாட்டு வண்டியில் ஸ்டாலின்

இதையடுத்து, திருக்கண்ணமங்கை வழியாக அம்மையப்பனில் சிறிது தூரம் நடந்து சென்றார். அங்கு விவசாயிகள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களை சந்தித்தார். தொடர்ந்து குளிக்கரைக்குச் சென்ற ஸ்டாலின் மாட்டு வண்டியில் பயணம் செய்தார். அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு,  நடிகர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன் உட்பட கட்சியினர் சென்றனர். நகரப் பகுதிகளை தவிர்த்துவிட்டு கிராமங்கள் வழியாக செல்லும் ஸ்டாலினுக்கு கிராமங்களில் உள்ள மக்கள் வீடுகள்தோறும் வரவேற்பு அளித்து வருகின்றனர். பெண்கள் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். பல இடங்களில் விவசாயிகள் ஸ்டாலினுக்குப் பச்சைத் துண்டு அணிவித்து வரவேற்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!