`நீதான் கைகொடுக்கணும் காவிரித் தாயே' - ஆற்றில் இறங்கி கண்ணீர்விட்ட டி.ராஜேந்தர்

காவிரி காய்ந்து கிடப்பதை பார்த்து திருயையாறு காவிரி ஆள்ள்ரில் இறங்கி கண்கள் கலங்க பாட்டு பாடி வேதனை தெரிவித்தார் டி.ராஜேந்தர்

''காவிரித் தாயே... தஞ்சை காய்ஞ்சு போச்சு, நஞ்சை காய்ஞ்சு போச்சு நீதான் கைகொடுக்க வேணும்'' என டி.ராஜேந்தர் திருவையாறு காவிரி ஆற்றில் இறங்கி மண்டியிட்டுக் கண்கலங்கி பாட்டுப் பாடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வேதனை தெரிவித்தார்.

T.RAJENDAR SPEECH

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக மக்கள் வாழ்வுரிமை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக வந்திருந்த லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டி.ராஜேந்தர், முன்னதாக திருவையாறு காவிரி ஆற்றில் இறங்கி, காவிரி காய்ஞ்சு கிடப்பதைப் பார்த்து, ''காவிரித் தாயே... நீதான் கைகொடுக்க வேணும். என் தவழ்ந்து வந்த அம்மா'' என கண்கள் கலங்க மண்டியிட்டு பாட்டுப் பாடினார்.

அப்போது, ''நான் காவிரி கரைபுரண்டு ஓடியதைப் பார்த்தவன். இன்றைக்கு காவிரி காய்ஞ்சு போய் கிடக்கு. இந்தக் காவிரித் தாயைக் காய வெச்சு மீத்தேன் ஹைட்ரோகார்பன் எடுக்க இருக்கிறார்கள். இங்கு இருக்கும் பச்சைவயல்களை எல்லாம் எண்ணெய் வயல்களால மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. இதனால்  தஞ்சை பூமியைச் சோற்றுக்கு வழியில்லாத சோமாலியாவாக மாறப்போகிறது'' என வேதனை தெரிவித்தார்.

பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர், தமிழகத்தில் பெரும் வறட்சி நிலவிவருகிறது. அதனால் புரட்சி வெடிக்க வேண்டும். மக்கள் மகிழ்ச்சி இல்லாமல் தவிப்பதோடு, அரசியல் கட்சி தலைவர்கள் அவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். நான் எத்தனையோ முதலமைச்சர்களைப் பார்த்தவன். அவர்கள் நல்லது செய்யும்போது அதை மக்களிடம் எடுத்துக் கூறியுள்ளேன்.

அண்ணா மறைவுக்குப் பிறகு, காவிரி வழக்கை வாபஸ் பெற்றது யார். மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட்டது யார். இப்படி உரிமைகளை எல்லாம் காவு கொடுத்துவிட்டு, இன்றைக்கு உரிமையை மீட்க நடைப்பயணம் போவதாக நாடகமாடுகிறார்கள். காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது தி.மு.க. பி.ஜே.பி-யோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வமும். மாணவர்கள் போராட வேண்டும் என்கிறார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். அவர்கள்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதால்தான்  மாணவர்களைப் போராட்டத்துக்கு அழைக்கிறார்கள்'' என்று பேசினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!