ஸ்டெர்லைட் மனுவை நிராகரித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்! - உற்பத்தியில் `திடீர்' சிக்கல் | Pollution control board with drawn the petition for sterlite licence renewal

வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (10/04/2018)

கடைசி தொடர்பு:14:58 (10/04/2018)

ஸ்டெர்லைட் மனுவை நிராகரித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்! - உற்பத்தியில் `திடீர்' சிக்கல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்காக ஆலை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவைத் தமிழக மாசுக்கட்டுபாட்டு வாரியம் நிராகரித்துள்ளது. அதனால், பராமரிப்புப் பணிக்காகக் கூடுதலாக 15 தினங்கள் ஆலையில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sterlite industry

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தாமிரம் முக்கிய உற்பத்தியாகவும் சல்பியூரிக் ஆசிட் போன்ற பிற அமிலங்கள் உதிரி உற்பத்தியாகவும் தயார் செய்யப்பட்டுவருகிறது.

இந்த ஆலையில் வருடாந்தர பராமரிப்புப் பணிக்காக ஒவ்வொரு பிரிவும் 10 முதல் 15 நாள்கள் உற்பத்தி நிறுத்தி வைக்கப்படும். அதன்படி இந்த ஆலையில் தாமிர உற்பத்திப் பிரிவு, கடந்த 26-ம் தேதி முதல் தற்காலிமாக வருடாந்தர பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் இந்த ஆலைக்கு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள உரிமத்தின் காலம் முடிந்துவிட்டது. ஆனாலும், ஆலையை மூடிட வலியுறுத்தி, அருகில் உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள்  மட்டுமல்லாமல் 8 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பராமரிப்பு முடிந்து மீண்டும் தாமிர பிரிவினை இயக்குவதற்காக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்காக ஆலை சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது வரை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனுமதி வழங்கவில்லை. இதனால், ஆலையில்  கூடுதலாக 15 நாள்களுக்கு உற்பத்தி நிறுத்திவைக்கப்படுவதாக ஆலை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

"ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிமத்தைப் புதுப்பித்து வழங்கிடக் கூடாது. முறையான அனுமதியே இல்லாமல் ஆலையின் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இந்த விரிவாக்கப் பணிகளும் உடனடியாகத் தடுத்து  நிறுத்தப்பட வேண்டும். தற்போது செயல்பட்டு வரும் ஆலையும் நிரந்தரமாக மூடிட வேண்டும். ஆலை மூடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்" என்கின்றனர் குமரெட்டியாபுரம் கிராம மக்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close