`ஐ.பி.எல் போட்டியை நிறுத்த டி.ராஜேந்தர் கொடுத்த ஐடியா! #WeWantCMB

`பிரதமருக்குக் கறுப்புக் கொடி காட்டினால் மட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிடுமா’ எனக் கேள்வி எழுப்புகிறார்  டி.ராஜேந்தர். 
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர், திருச்சி விமான நிலையத்தில் 
பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
டி.ராஜேந்தர்

அப்போது அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுதும் போராட்டம் நடக்கிறது. இப்போது காவிரி உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்பவர்கள்தான் காவிரி உரிமையை அடகு வைத்தவர்கள். தமிழகம் வரும் இந்திய பிரதமர் மோடிக்குக் கறுப்புக்க்  கொடி காட்டினால் மட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு விடுமா? எனக் கேள்வி எழுப்பிய அவர், ஐ.பி.எல் போட்டியின் போது மைதானத்துக்குள் சென்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்த வேண்டும்.

மேலும், யாரோ ஒருவர் போட்ட உத்தரவினால்தான்,நேற்று சென்னையில் திரைத்துறை நடத்திய போராட்டம் மெளனப் போராட்டமாக நடைபெற்றது என்று குற்றஞ்சாட்டினார்.

இறுதியாக வரும் மே மாதம் கர்நாடகாவில் தேர்தல் முடிந்தால்தான் காவிரிப் பிரச்னையில் தமிழகத்துக்கு விடிவு கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!