வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (10/04/2018)

கடைசி தொடர்பு:15:46 (10/04/2018)

மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம்! - இந்தியாவில் தயாரான  சூப்பர் ஃபாஸ்ட் ரயில் இன்ஜீன்

மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம்! - இந்தியாவில் தயாரான  சூப்பர் ஃபாஸ்ட் ரயில் இன்ஜீன்

ந்தியாவில் முதன்முறையாக 12,000 குதிரைத்திறன் கொண்ட சூப்பர் ஃபாஸ்ட் ரயில் இன்ஜீன்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பீகாரில் உள்ள மாதேபுரா ( Madhepura) பணிமனையில் `மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.  

இதற்காக 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மெகராவில் தொழிற்சாலை, உத்தரப்பிரதேச மாநிலம் ஷரன்பூர் மற்றும் நாக்பூரில் பழுதுபார்ப்புப் பணிமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரான்ஸை சேர்ந்த ஆஸ்டம் என்கிற நிறுவனம் தொழில்நுட்பம் அளித்துள்ளது. 

எலக்ட்ரிக் லோகோமேடிவ்

11 ஆண்டுகளுக்குள் 800 ரயில் இன்ஜீன்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் ஐந்து மட்டும் பிரான்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஒன்று தயாரிக்க ரூ. 25 கோடி வரை செலவாகிறது. 2020-ம் ஆண்டுக்குள் 40 இன்ஜீன்கள் பயன்பாட்டுக்கு வரும். 12,000 குதிரைத் திறன் கொண்ட இவை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை.

இந்தியாவில்  6,000 குதிரைத்திறன் கொண்ட இன்ஜீன்களே இதுவரை, பயன்பாட்டில் உள்ளன. அதிக குதிரைத்திறன் கொண்டவை சரக்கு ரயில் போக்குவரத்துக்கு மிகுந்த உதவியாக இருக்கும். ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் போன்ற ஒரு சில நாடுகளிலேயே இத்தகைய ரயில் இன்ஜீன்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. மெகபூரா பணிமனையில் ஆண்டுக்கு 100 ரயில் இன்ஜீன்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க