`5 ஆண்டுகளாக 100 நாள் வேலை கொடுக்க மறுக்கிறாங்க' - ஆட்சியரிடம் குமுறிய கிராம மக்கள் | Villagers complaint to Sivagangai collector about 100 days work scheme

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (10/04/2018)

கடைசி தொடர்பு:16:20 (10/04/2018)

`5 ஆண்டுகளாக 100 நாள் வேலை கொடுக்க மறுக்கிறாங்க' - ஆட்சியரிடம் குமுறிய கிராம மக்கள்

''கடந்த 5 ஆண்டுக் காலமாக நூறுநாள் வேலை வழங்கவில்லை; குடிதண்ணீர் சரியாக வருவதில்லை; சாலை வசதியில்லை'' என்று புதுக்குடியிருப்பு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் லதாவிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
 

கிராம மக்கள்


இதுகுறித்து இந்தக் கிராம மக்கள் பேசும்போது, “சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் யூனியன் காயா ஓடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி புதுக்குடியிருப்பு. இந்தக் குடியிருப்புப் பகுதி 2 வது வார்டில் இருக்கிறது. இங்கு சுமார் இருநூறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை எங்கள் பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை கொடுத்ததில்லை. நாங்கள் போய் வேலை கேட்டால் ஐந்து மைல் தூரம் போய் வேலை பார்க்கிறீர்களானு கேட்கிறாரு. சின்டெக்ஸ் இருக்கு; ஆனால், தண்ணீர் இல்லை. நாங்க குடிக்கிறதுக்கு ஒரு கேன் தண்ணீர் ரூபாய் 35 கொடுத்து வாங்குறோம். காவேரி கூட்டுக்குடிநீர் எங்க ஊர் வழியாகத்தான் போகிறது. ஆனால், வறட்சி எங்கள் பகுதியில் மட்டும் தாண்டவமாடுகிறது.

1வது வார்டுகளில் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறார்கள். தினமும் எங்களுக்கு வந்த காவேரி தண்ணீர் தற்போது வருவதில்லை. எங்கள் குறைகளை பஞ்சாயத்து கிளார்க் செல்வராஜிடம் சொன்னால் கொஞ்சம்கூட கண்டுகொள்வதில்லை. சமத்துவபுரத்தில் இருந்து புதுக்குடியிருப்பு பகுதிவரைக்கும் செல்லும் சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதையெல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் சொல்லியிருக்கிறோம். எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்கிற நம்பிக்கையில் இங்கிருந்து திரும்பி செல்லுகிறோம்” என்றார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க