அமைச்சர் ஆதரவாளர்கள் மீது கொலை மிரட்டல் புகார் அளித்த சாமியார்..!

கருட சித்தர் என்பவர் தொடர்ந்து ஆன்மிக ஸ்தலங்கள் ஆசி வழங்குவது வழக்கம்.

மதுரை அழகர்கோயிலைச் சேர்ந்த கருட சித்தர் என்பவர் ஆன்மிக ஸ்தலங்களில் ஆசி வழங்குவது வழக்கம். அவ்வப்போது ஃபேஸ்புக் , வாட்ஸ் அப் என்று தனது ஆசியை நவீனப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமூகப் பிரச்னைகள் பற்றி சமூக வலைதளங்களில் பதிந்துவருகிறார். தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் நிலையில் கருடச் சித்தரும் இது தொடர்பாக மத்திய, மாநில அரசின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். தனது உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், மிரட்டல் விடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். சமூக வளைதளங்களில் தனது கருத்தை பதிவிட்டதால் அமைச்சரின் ஆதரவாளர்கள் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!