தீயணைப்புப் படையினரை நடுங்க வைத்த பாம்பு!

சாரப்பாம்பு சரசரவென புகுந்தது

பாம்பு

மதுரை வளர்நகர் குடியிருப்புப் பகுதியில் சுமார் 6 அடி நீளமுள்ள சாரப்பாம்பு சரசரவென புகுந்தது. இதனால் பதற்றம் அடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், பாம்பின் சீறலைக் கண்டு அச்சப்பட்டு ஒதுங்கியே நின்றனர். பாம்பு வெளியே போகாத அளவுக்கு தடுத்துவைக்க மட்டுமே அவர்களால் முடிந்தது. அதற்குப் பின் அறக்கட்டளையில் இருந்து வந்த பாம்புகள் நல ஆர்வலர் சரவணன் 5 நிமிடத்துக்குள் கட்டுக்குள் கொண்டு வந்து பாம்பை லாபகரமாகப் பிடித்தார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு கைகள் தட்டி உற்சாகப்படுத்தினர்.

பாம்பு

சரவணன் கூறுகையில், ''நான் எலெக்ட்ரிசனாகப் பணியாற்றுகிறேன். மனநிறைவுக்காக இப்படி சமூக சேவைகளும் அவ்வப்போது செய்வேன். இந்தச் சாரப்பாம்பு விஷத்தன்மை கொண்டதல்ல. யாரையும் பலி வாங்கவும் வரவில்லை. வெயில் காலமாக இருக்கவும் தண்ணீரை தேடி வந்துள்ளது. மோட்டார் பம்புகள் குளியல் அறைகள் உள்ளிட்ட இடங்களில் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. இதை நாம் அடித்து துன்புறுத்திவிடக் கூடாது'' என்று கேட்டுக்கொண்டார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!