வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (10/04/2018)

கடைசி தொடர்பு:19:30 (10/04/2018)

ரூ.132 கோடியில் ஒரு நம்பர் பிளேட்!

ரூ.132 கோடியில் ஒரு நம்பர் பிளேட்!

வாகனங்களுக்கு ஃபேன்ஸி நம்பர் வாங்க அனைவருமே விரும்புவார்கள். பணம் படைத்தவர்கள் இதற்காகச் சில லகரங்கள் வரை இறைக்கவும் தயாராக இருப்பார்கள். இந்தியாவில் கூட ஃபேன்ஸி எண்களுக்காக லட்சக்கணக்கில் செலவழிக்கும் பணக்காரர்களைப் பார்க்க முடியும். அந்த வகையில், இங்கிலாந்தில் நம்பர் பிளேட் ஒன்றின் விலை 132 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த கான் டிசைன் நிறுவனம் கார்களை வாடிக்கையாளர்கள் விருப்பதுக்கு ஏற்ப மாற்றியமைத்து தரும் பணிகளைச் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவர் அப்சல் கான் எப்-1 என்ற ஃபேன்ஸி எண்ணுடைய கார் வைத்திருக்கிறார். இதுதான் உலகிலேயே அதிக விலை கொண்ட ஃபேன்ஸி எண். எஸ்ஸெக்ஸ் சிட்டி கவுன்சிலிடமிருந்து இந்த எண்ணை 4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய அப்சல் கான், தன் புகாடி வெய்ரோன் காரின் நம்பராகப் பயன்படுத்தி வருகிறார். இந்த எண்ணை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள அவர் 132 கோடி ரூபாய் என விலை நிர்ணயித்துள்ளார்.

ஃபேன்ஸி நம்பர் பிளேட்

பிரபல கார் பந்தயமான பார்முலா1- ஐ இந்த எண் குறிப்பிடுவதால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் இதை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். இந்த 132 கோடியில் 4,500 மாருதி ஆல்ட்டோ கார்களை வாங்கி விட முடியும். 10 புகாடி வெய்ரோன் கார்களையும் வாங்கி விடலாம். முன்னதாக துபாயைச் சேர்ந்த இந்தியத் தொழிலதிபர் பல்வீந்தர் சிங், டி-5 என்ற ஃபேன்ஸி எண்ணை 67 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார். அபுதாபியில் 2008-ம் ஆண்டு 1 என்ற எண் 66 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. 

உலக நாடுகளில் போக்குவரத்து அலுவலகங்களில் வருவாயை அதிகரிக்க ஃபேன்ஸி எண் வழங்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க