வெளியிடப்பட்ட நேரம்: 21:56 (10/04/2018)

கடைசி தொடர்பு:11:25 (11/04/2018)

கர்நாடகப் பேருந்தை அடித்து உடைத்த நாம் தமிழர் கட்சியினர்..!

பெங்களூரு செல்லக்கூடிய கர்நாடகப் பேருந்திலிருந்த கன்னட எழுத்துகளை நாம் தமிழர் கட்சியினர் தார் பூசி அழித்து, கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. பல்வேறு அரசியல் கட்சியினரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்று, சென்னையில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் ஒரு பகுதியாக, கடலூரிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் கர்நாடகப் பேருந்தை வழிமறித்த நாம் தமிழர் கட்சியினர், அதிலிருந்த கன்னட எழுத்துகளைத் தார் பூசி அழித்தனர்.

மேலும், பேருந்தின் கண்ணாடிகளையும் உடைத்தனர். அங்கு வந்த காவல்துறையினர், நாம் தமிழர் கட்சியினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க