வெளியிடப்பட்ட நேரம்: 22:48 (10/04/2018)

கடைசி தொடர்பு:11:08 (11/04/2018)

கூட்டுறவு சங்கத் தேர்தலில் இரு தரப்புக்கிடையே மோதல் - போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் பெருவிளை கூட்டுறவு சங்கத் தேர்தலில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ன்னியாகுமரி மாவட்டம் பெருவிளை கூட்டுறவு சங்கத் தேர்தலில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பெருவிளை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இருதரப்பினரிடையே நடந்த மோதல்

தமிழகத்தில், கூட்டுறவு சங்கத் தேர்தல் நடந்துவருகிறது. இதில், ஆளும் கட்சியினர் பல இடங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், நாகர்கோவிலை அடுத்த பெருவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு வேட்புமனு தாக்கல் நேற்று நடந்திருக்கிறது. அப்போது, ஆளும் ஒரு தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில், சங்கத் தேர்தல் நடத்தவந்த அதிகாரி மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள்.

பெருவிளை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இருதரப்பினரிடையே நடந்த மோதல்

மேலும், பெருவிளை கூட்டுறவு சங்க அலுவலகத்தில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, பெருவிளை கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்த மோஷிதயான் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தேர்தல் நடக்கும் அன்று, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார், பெருவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பதிவான சி.சி.டி.கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். குமரி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கத் தேர்தலில் தில்லுமுல்லு நடப்பதாக  6 எம்.எல்.ஏ-க்களும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் சென்று போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.