கரூரில் ரூ.2.06 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளுக்குப் பூமி பூஜை!

கரூர் மாவட்டத்தில் மொத்தம் ரூ.2.28 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளுக்குப் பூமி பூஜை போடப்பட்டது. இதில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் பூமி பூஜையிட்டு பணிகளைத் தொடங்கிவைத்தனர். 

தாந்தோணி ஒன்றியம், கருப்பம்பாளையத்தில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.54.45 லட்சம் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை-7 முதல் மட்டப்பாறைபுதூர் வரை சாலை புதுப்பிக்கும் பணியும், அரவக்குறிச்சி ஒன்றியம், சேந்தமங்கலம் கிழக்குப் பகுதியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் குறிக்காரன்வலசு முதல் பள்ளபட்டி வரை ரூ.26.06 லட்சம் மதிப்பில் சாலை தரம் உயர்த்தும் பணியும் மற்றும் ரூ.48.98 லட்சம் மதிப்பில் சாலை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 

இதேபோல், மொடக்கூர் முதல் இனங்கனூர் வரை ரூ.54.06 லட்சம் மதிப்பில் சாலை புதுப்பிக்கும் பணியும், தெத்துப்பட்டி பகுதியில் ரூ.22.73 லட்சம் மதிப்பில் வேலஞ்செட்டியூர் முதல் அஞ்சக்கவுண்டன்பட்டி வரை சாலை புதுப்பிக்கும் பணிகள் பூமி பூஜையிட்டு தொடங்கப்பட்டது. அப்போது, பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்களுக்கு அமைச்சர் மற்றும் தம்பிதுரை ஆகியோர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!