வெளியிடப்பட்ட நேரம்: 01:43 (11/04/2018)

கடைசி தொடர்பு:10:19 (11/04/2018)

`இங்கிலாந்து இளவரசர் திருமணம்' - ட்ரம்ப், ஒபாமாவுக்கு அழைப்பு இல்லை..!

இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கும் டி.வி சீரியல் நடிகைக்கும் நடைபெறவிருக்கும் திருமணத்துக்கு அமெரிக்க தலைவர்களுக்கு அழைப்பு இல்லை.

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும் இளவரசர் வில்லியமின் தம்பியுமான இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க டி.வி சீரியல் நடிகையான மேகன் மார்க்லிக்கும் இங்கிலாந்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்தத் திருமணத்துக்கு யார் யாரை அழைக்க வேண்டும் என்பதற்கான பணிகள் முடிந்துவிட்டதாம். அரசியல்வாதிகளின் அழைப்புகளைப் பொறுத்தவரை, யாரை அழைக்க வேண்டும் என்பது ப்ரிட்டிஷ் அரசாங்கத்தோடு இணைந்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் கூறுகின்றன. 

இங்கிலாந்து இளவரசர் திருமணம்

அதன்படி, மணம் முடிப்பவர்களுக்கு நேரடித் தொடர்பில் உள்ள அரசியல் தலைவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொள்ளப் போகிறார்கள். அவர்களுக்கு மட்டும்தான் அழைப்பு உள்ளதாம். ட்ரம்ப்புக்கு, மணமகன்-மணமகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாததால், அவருக்கு அழைப்பு கிடையாதாம். ஹாரிக்கும் ஒபாமாவுக்கும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால், ட்ரம்ப்பை அழைக்காமல் ஒபாமாவை திருமணத்துக்கு அழைப்பது அரசாங்க ரீதியான உறவுமுறைகளைப் பாதிக்கும் என்பதால், இருவருக்குமே அழைப்புகள் இல்லையாம். இந்தத் திருமணத்தில் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் தகவல் வந்துள்ளது.