ராப்ரி தேவியின் பாதுகாப்பு அதிகாரிகள் 32 பேரை திரும்பப்பெற்ற பீகார் அரசு..!

பீகார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த 32 பாதுகாப்பு அதிகாரிகளை பீகார் அரசு திரும்பப்பெற்றது.

பீகார் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த 32 பாதுகாப்பு அதிகாரிகளை பீகார் அரசு திரும்பப்பெற்றது.

ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) சார்பாக, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி, ஒடிசா மாநிலம் பூரியில் இயங்கிவந்த இரு ஓட்டல்களின் பராமரிப்புகள், ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

ராப்ரி தேவி

இந்த ஒப்பந்தத்தை, விதிகளை மீறி ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக, பாட்னாவில் முக்கிய இடத்தில் இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், அந்த தனியார் நிறுவனத்திடமிருந்து லாலுவின் உறவினர் பெயருக்கு மாற்றப்பட்டதாக, புகார் எழுந்தது. இந்த வழக்கில், லாலு பிரசாத், அவரது மனைவி, மகன் தேஜஸ்வி மற்றும் அவரது உறவினர்கள்மீது, சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ அதிகாரிகள் ராப்ரி தேவியின் வீட்டில் சோதனை நடத்தினர். அவரிடம் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதே வழக்கு தொடர்பாக லாலுவின் மகன் தேஜஸ்வியிடமும் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த சோதனை மற்றும் விசாரணை முடிந்த சில மணி நேரங்களில், ராப்ரி தேவியின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த 32 பாதுகாப்பு அதிகாரிகளை பீகார் அரசு திரும்பப்பெற்றது.

இதுகுறித்து தேஜஸ்வி தனது ட்விட்டர் பக்கத்தில், பீகார் அரசை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும், தான் தங்கியுள்ள அரசு பங்களாவை காலிசெய்யுமாறு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!