வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (11/04/2018)

கடைசி தொடர்பு:11:02 (11/04/2018)

தமிழ்ப் புத்தாண்டில் திருச்செந்தூர் சண்முகருக்கு அன்னாபிஷேகம்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சுவாமி சண்முகருக்கு சிறப்பு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சுவாமி சண்முகருக்கு சிறப்பு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. 

அன்னாபிசேகம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அதில், தமிழ்ப் புத்தாண்டும் ஒன்று. வரும் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 

4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சி கால அபிஷேகம் மற்றும் உற்சவர் சுவாமி சண்முகருக்கு சிறப்பு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. தமிழ் ஆண்டு பிறப்பை முன்னிட்டு, காலை 11 மணிக்கு திருக்கோயில் பொதுவிவர நாள்குறிப்பேடு வெளியிடுதல் நடைபெறுகிறது.  அதைத் தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் வழக்கம்போல நடைபெறும்.  12 மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சாயாட்சை தீபாராதனையும், தொடர்ந்து 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. திருக்கோயில் கலையரங்கில் சமயச் சொற்பொழிவும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க