தமிழகம் வரும் பிரதமருக்கு பலத்த பாதுகாப்புகள் வழங்கப்படும் - ஜெயக்குமார்

தமிழகத்துக்கு நாளை வரும் பிரதம் மோடிக்கு உரியப் பாதுகாப்பு வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜெயகுமார்

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தையில் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியைக் காண பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தரவுள்ளார். தமிழகத்தில் காவிரி தொடர்பான பிரச்னைகள் வலுத்து வரும் நிலையில் மோடி தமிழகம் வரும்போது அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

இந்நிலையில் இன்று காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்காததற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. பிரதமர் மோடி நாளை தமிழகம் வரும்போது அவருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவிரி விவகாரம் தொடர்பாகச் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே நடந்த போராட்டத்தில் போலீஸாரை தாக்கியதுக்காக நடிகர் ரஜினி கண்டனம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. அதை ஒருபோதும் ஏற்க முடியாது” எனக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!