வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (11/04/2018)

கடைசி தொடர்பு:12:38 (11/04/2018)

நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்வாரா?

15 வது நிதி குழுமத்துக்கு எதிராக அடுத்தகட்டமாக விசாகப்பட்டணத்தில் நடக்கும் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகம் சார்பில் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

15-வது நிதிக் குழுமத்துக்கு எதிராக, அடுத்தகட்டமாக விசாகப்பட்டினத்தில் நடக்கும் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில், தமிழகம் சார்பில் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓ.பன்னீர் செல்வம்

மத்திய அரசின் 15-வது நிதிக் குழுமத்தில், மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாகப் போர்க்கொடி உயர்ந்துள்ளது. 1971-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால், குறைந்த அளவு நிதி கிடைக்கும் என்பதாலும், மாநிலங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் என்றும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, தென் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் ஆலோசனைக்கூட்டம் ஒன்றை கேரள அரசு ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநில நிதியமைச்சர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். நேற்று, திருவனந்தபுரத்தில் நடந்த இந்த ஆலோசனைக்கூட்டத்துக்குச் செல்லாமல், தமிழக நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்தார். அரசியல் காரணங்களுக்காகச் செல்லவில்லை என ஓ.பி.எஸ் கூறியிருப்பதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று, தெலங்கானா மாநில நிதியமைச்சரும் பங்கேற்கவில்லை.

பன்னீர்செல்வம்

ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், ''மத்திய அரசின் 15-வது நிதிக் குழுமம், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துவிட்டு நகராட்சிகளாக மாற்றிவிடும். எனவே, இதை மாநிலங்களின் உரிமைப் போராட்டமாக மாற்றுவோம். ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதம் தொடக்கத்தில், விசாகப்பட்டினத்தில் அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறோம். இதில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்களையும் அழைப்போம்'' என்றார். 15-வது நிதிக் குழுமத்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்திலாவது தமிழகத்தின் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்வாரா என்ற கேள்வி இப்போதே எழுந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க