`தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் அல்ல... கருணாஸ் கட்சியினர்’ சொல்கிறார் தோனி ரசிகர்!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று  நடந்த ஐபிஎல் போட்டியின்போது, தோனி ரசிகர் தாக்கப்பட்டதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

சரவணன்

நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராகக் கடும் போராட்டம் நடந்தது. சென்னை சேப்பக்கம் மைதானம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் பல்வேறு கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் காவலர்கள் தடியடி நடத்தினர். காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர், கிரிக்கெட் போட்டியைக் காணச் சென்ற ரசிகர்களைத்  தாக்கினர். சென்னையைச்  சேர்ந்த பிரபல தோனி ரசிகர், சரவணன். யெல்லோ மேன்( Yellow Man) என்றழைக்கப்படும் இவரை தோனி விளையாடும் அனைத்துப்  போட்டிகளிலும் பார்க்கலாம். நேற்று  இவர் மைதானத்துக்குச் செல்லும் வழியில், நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதாகப் புகார் தெரிவித்தார். 

இந்நிலையில் இன்று, சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அவர்கள் திடீரென தாக்கினர். அந்நேரத்தில் கட்சிக் கொடியை என்னால் சரியாகச்  சொல்ல முடியவில்லை. அப்போது,  தவறுதலாக சீமான் கட்சியினர் தாக்கியதாக அவசரத்தில் சொல்லிவிட்டேன். வீடியோக்களைப் பார்த்த பின்னர்தான், என்னைத்  தாக்கியது நடிகர் கருணாஸ் சட்சியினர் எனத் தெரியவந்தது’ எனப் பதிவுசெய்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!