காவிரிக்காக நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் தீப்பற்றி எரிந்த இளைஞர்!

ரயில் இன்ஜின் மீது ஏறியவர் தீப்பற்றி எரிந்தார்.

காவிரிக்காக நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் தீப்பற்றி எரிந்த இளைஞர்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திண்டிவனத்தில் பா.ம.க சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திண்டிவனம் ரயில் நிலையத்தில் குருவாயூர் ரயிலை மறித்து பா.ம.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ரயில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சிலர் ரயில் இன்ஜின் மீது ஏறி கோஷங்களை எழுப்பினர். 

ரயில் இன்ஜீனில் தீ பற்றி எரிந்த பா.ம.க தொண்டர்

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரும் இன்ஜின் மீது ஏறி கோஷமிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தலைக்கு மேல் சென்ற அதிசக்திவாய்ந்த மின்சார கம்பி ரஞ்சித்தின் தலை மீது உரசியது. இதில், அவரின் உடல் தீப்பற்றி எரிந்தது. படுகாயமடைந்த அவரை பா.ம.க தொண்டர்கள் மீட்டு, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். அரசியல் கட்சித் தலைவர்கள், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் போராட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!