வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (11/04/2018)

கடைசி தொடர்பு:15:16 (11/04/2018)

தண்ணீர் பாட்டில்கள் சுமந்த தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸி!

தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்லெஸியின் எளிமை பிடித்திருப்பதாக ஓஜோ ட்வீட் செய்துள்ளார்.

தண்ணீர் பாட்டில்கள் சுமந்த தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸி!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் 12வது வீரரான தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுப்லெஸி மைதானத்துக்குள் தண்ணீர் பாட்டில்கள் சுமந்து சென்றது கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளளது.

தண்ணீர் பாட்டில்களுடன் தென்ஆப்ரிக்க அணி கேப்டன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று கொல்கத்தா அணியுடன்  சேப்பாக்கத்தில் மோதியது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுப்லெஸி சென்னை அணியில் இடம் பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்க ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான தொடரின்போது, அவருக்கு விரல்களில் காயம் ஏற்பட்டது. இதனால், நேற்றைய ஆட்டத்தில் அவர் களம் இறங்கவில்லை. மொகாலியில் 12-ம் தேதி நடக்கவுள்ள ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடுகிறது. இந்த ஆட்டத்திலும் டுப்லெஸி களம் இறங்குவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று சென்னை அணியின் பயிற்சியாளர் மைக் ஹசி கூறியுள்ளார். 

நேற்றையை ஆட்டத்தில் டுப்லெஸி களம் இறங்காவிட்டாலும் ராமருக்கு உதவிய அணில்போல 12 வது வீரராகச் செயல்பட்டார். சென்னை அணி வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், துண்டு போன்றவற்றை எடுத்துச் செல்லும் பணிகளில் அவர் ஈடுபட்டதைப் பார்த்து ரசிகர்கள் நெகிழ்ந்துபோனார்கள். அந்தச் சமயத்தில்தான் மைதானத்துக்குள் காலணியும் வீசப்பட்டது. அதையும் டுப்லெஸி எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். 

டுப்லெஸி

தென்னாப்பிரிக்க அணி கேப்டனின் எளிமையால் கவரப்பட்ட இந்திய வீரர் பிரையன் ஓஜோ, ''பணிவு மிகவும் நல்ல பண்பு. களமிறங்க முடியாத நிலையில் தன் டீம் மேட்சுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் தென்னாப்பிரிக்க அணி கேப்டனின் எளிமையான குணம் என்னை கவர்ந்துள்ளது'' என ட்வீட்டியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க