வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (11/04/2018)

கடைசி தொடர்பு:15:19 (11/04/2018)

`கொலைமுயற்சி வழக்கு கொடுமையானது!’ சீமானுக்காகக் குரல் கொடுக்கும் வைரமுத்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருப்பது கொடுமையானது எனக் கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

`கொலைமுயற்சி வழக்கு கொடுமையானது!’ சீமானுக்காகக் குரல் கொடுக்கும் வைரமுத்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருப்பது கொடுமையானது எனக் கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். 

வைரமுத்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது எனப் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதிய நேற்றைய போட்டிக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டி தொடங்குவதற்கு முன்பாகச் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு பெ.மணியரசன், இயக்குநர் பாரதிராஜா, சீமான், கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் இணைந்ததால், மைதானத்துக்கு வெளியே போலீஸார் - போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் அப்புறப்படுத்தினர். இந்தப் போராட்டத்தின்போது போலீஸார் சிலரும் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து, ``அறவழிப் போராட்டத்தில் எதிர்பாராமல் நிகழும் வன்செயல்கள் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல. ஆனால், சீமான் மீது கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப் பதிவது கொடுமையானது’’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.