வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (11/04/2018)

கடைசி தொடர்பு:17:30 (11/04/2018)

மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்!

தமிழகமெங்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும்

தமிழகமெங்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்தும் பல்வேறு கட்சியினர் நடத்தும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இன்று சிவகாசியில் நாம் தமிழர் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாம் தமிழர் கட்சியினர்

நாம் தமிழர் கட்சியினர் பேரணியாகச் சென்று மினி விளையாட்டு மைதானம் அருகிலுள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசைக் கண்டித்தும் உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஐ.பி.எல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். சிவகாசி வட்டாரத்தில் இயங்குகின்ற அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் லைசென்ஸ் கொடுக்கும் அந்த அலுவலகத்துக்குள் நாம் தமிழர் கட்சியினர் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதி பதற்றத்துடன் காணப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க