சாமித்தோப்பில் விமான நிலையம்! - ஓடுதளம் அமைப்பது குறித்து அதிகாரிகள் குழு ஆய்வு!

கன்னியாகுமரியை அடுத்த சாமித்தோப்பில் ஏர்போட் அமையும் இடத்தில் ஓடுதளம் அமைக்கும் இடம் குறித்து மத்திய விமானத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

ன்னியாகுமரியை அடுத்த சாமித்தோப்பில் ஏர்போர்ட் அமையும் இடத்தில் ஓடுதளம் அமைக்கும் இடம் குறித்து மத்திய விமானத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

ஓடுதளம் அமைக்கும் இடம் குறித்து மத்திய விமானத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.

கன்னியாகுமரியை அடுத்த சாமித்தோப்பு பகுதியில் விமானநிலையம் அமைப்பதற்காக மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிக்காகத் தமிழக முதல்வர் ரூ.13.50 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார். கடந்த நான்கு மாதத்துக்கு முன்பாகச் செயற்கைகோள் உதவியுடன் ஜி.பி.எஸ் கருவியைப் பயன்படுத்தி சாமித்தோப்பு உப்பளம் பகுதியில் 800 ஏக்கர் நிலம் ஆய்வு செய்யும் பணி நடந்தது. அந்த ஆய்வறிக்கை மத்திய அரசின் விமானத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

சாமித்தோப்பு உப்பளம் பகுதி

இதையடுத்து, மத்திய விமானத்துறை துணைப் பொது மேலாளர்கள் சுதே சர்மா, குப்தா, அனுராக் மிஸ்ரா மற்றும் உதவி துணைப் பொது மேலாளர் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய நான்குபேர் குழு விமானநிலையம் அமைய உள்ள இடத்தை இன்று ஆய்வு செய்தனர். விமானம் தரை இறங்கும்போது காற்றின் வேகம் எப்படி இருக்கும், காற்று எந்தத் திசையில் வீசும் என்பது குறித்து ஆய்வு செய்து ஓடுதளம் அமைக்கப்படும் எனவும் இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகள், கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் விமான நிலையப் பணிகள் தொடங்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!