ரயில்மீது கல்வீச்சு... போலீஸுடன் வாக்குவாதம்... களேபரமான பா.ம.க போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கth தவறிய மத்திய அரசைக் கண்டித்து பா.ம.க சார்பில் நடைபெற்ற ரயில் மறியலில் தொண்டர் கல்வீச்சில் ஈடுபட்டதால் போராட்டக்களம் கலவர காட்சியளித்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து பா.ம.க சார்பில் இன்று கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அரியலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

                               பாமக போராட்டம்
இந்நிலையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பா.ம.க-வினர் நடத்திய இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து கையில் கறுப்புக்கொடிகளை ஏந்தியும் கறுப்பு பேட்ஜ் அணிந்தும் ஊர்வலத்தில் கலந்துகொண்டு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சென்னையிலிருந்து குருவாயூர் நோக்கி சென்ற குருவாயூர் விரைவு ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரயில் முன் அமர்ந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட பா.ம.க தொண்டர்கள் திடீரென குருவாயூர் ரயில் நோக்கி கல்வீசி தாக்கத் தொடங்கினர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கல்வீச்சில் ஈடுபட்டவர்களைப் பிடித்து இழுத்துச் சென்றனர். அவர்களை விடுவிக்கக் கோரி பா.ம.க-வினர் காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், காவல்துறையினர் அவரை விடுவிக்க மறுத்துவிட்டனர். இதனால், பா.ம.க-வினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, குருவாயூர் ரயில் திருச்சி நோக்கி புறப்பட்டுச் சென்றது. இதன் பிறகு, பா.ம.க பொறுப்பாளர்கள் சிலர் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்வீச்சில் ஈடுபட்டவர்களை அழைத்துச் சென்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!