நாகர்கோவில் அனந்தன்குளத்தில் படகு சவாரி தொடக்கம்!

நாகர்கோவிலை அடுத்த அனந்தன்குளத்தில் பொழுதுபோக்கு படகு சவாரி இன்று துவங்கப்பட்டது.

நாகர்கோவிலை அடுத்த அனந்தன்குளத்தில் பொழுதுபோக்கு படகு சவாரி இன்று தொடங்கப்பட்டது.

படகு போக்குவரத்தை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மற்றும் மேல்சபை எம்.பி. விஜயகுமார் ஆகியோர் இன்று மாலை துவக்கி வைத்தனர்

நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட அனந்தன் குளத்தில் பொழுதுபோக்கு படகுசவாரி ஏற்படுத்தப்பட்டு புதிய சுற்றுலாத்தலமாக மாற்ற தமிழக சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்தது. கடந்த ஆண்டு கோடையின்போது சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட அனந்தன்குளம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து படகு குழாம் அமைக்கும் பணிகள் நடந்தன. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அனந்தன் குளத்தில் படகு சவாரி தொடங்கப்படுவதாக மாநிலங்களவை எம்.பி விஜயகுமார் தெரிவித்தார். இந்த நிலையில் குற்றாலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய படகுகள் ஓட்டை உடைசலாகக் காணப்பட்டது. இதுகுறித்து விகடன்.காம் செய்தி வெளியிட்டிருந்தது.

அனந்தன் குளத்தில் பொழுதுபோக்கு படகுசவாரி

இதையடுத்து படகுகள் சீரமைக்கப்பட்டதால் தொடக்க விழாவுக்கு காலதாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து படகுசவாரி இன்று தொடங்கப்பட்டது. மாவட்டக் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே மற்றும் எம்.பி விஜயகுமார் ஆகியோர் படகுசவாரியைத் தொடங்கி வைத்தனர். முதற்கட்டமாக 6 படகுகளும் அடுத்தகட்டமாக 5 படகுகளும் விடப்படுவதாகவும். புலியூர்குறிச்சி உதயகிரி கோட்டையில் இளைஞர்களுக்காக மலையேறும் பயிற்சியும் மணக்குடி காயலில் 3 கோடி ரூபாய் செலவில் படகு சவாரி ஆகிய திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருவதாகவும் விஜயகுமார் எம்.பி தெரிவித்தார். முன்னதாக விழாவுக்கு வந்த கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, படகு குழாம் பகுதிக்குச் செல்ல வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!