ரயிலுக்குள் ஏறி போராடிய பா.ம.க... மல்லுக்கட்டிய போலீஸ் - திருச்சியில் பரபரப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க-வினர், ரயிலுக்குள் ஏறியபோது, அவர்களை போலீஸார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் ரயில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க-வினர், ரயிலுக்குள் ஏறியபோது, அவர்களை போலீஸார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ம.க

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடந்தியது. புதுச்சேரி, அரியலூர், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு போராட்டங்கள் இருந்தது. மேலும்,  இந்த முழு அடைப்பு காரணமாக பல மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சி பட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் திலீப் குமார் தலைமையில், திரண்ட 100-க்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், திருச்சி ஜங்ஷன் பகுதியில் ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. இதனிடையே போராட்டக்காரர்கள் ஒருபகுதியினர், பா.ம.கதடுப்புகளை மீறி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்குள் சென்று, அங்கு நின்று கொண்டிருந்த திருச்சி - பாலக்காடு பயணிகள் ரயிலில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், போராட்டக்காரர்களை ரயிலில் இருந்து இறக்க, அவர்களுடன் போலீஸார் மல்லுக்கட்டினர். இதனால் திருச்சி ரயில் நிலைய வளாகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!