தண்டியடிகள் நாயனாருக்கு இன்று குருபூஜை விழா - கும்பகோணத்தில் ஏற்பாடு!

கும்பகோணம் ஜோதி மலை திருவடிக்குடில் இறைப் பணிக் கூடத்தில் தண்டியடிகள் நாயனார் குரு பூஜை வழிபாட்டு விழா 12-4-2018 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.

கும்பகோணம் ஜோதிமலை திருவடிக்குடில் இறைப்பணித் திருக்கூட்ட அலுவலகத்தில் அருள்திரு. தண்டியடிகள் நாயனார் குருபூஜை வழிபாட்டு விழா இன்று (12-4-2018) காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் தண்டியடிகள் நாயனார்.

குளம்

இதுகுறித்து திருவடிக்குடில் சத்யநாராயணன் கூறுகையில், ``திருவாரூரில் பிறந்த தண்டியடிகள் பார்வையற்றவராக இருந்தபோதிலும், அங்குள்ள குளத்தைத் தூர் வாரிக்கொண்டிருந்தார்.

திருவடிக்குடில் சுவாமிகள்  அந்நாளில் அவரது  இச்செயலைக் கண்ட சமணர்கள் கேலி செய்தனர். 'ஈசனருளால் பார்வைபெற்று தூர் வாருவேன்' எனக் கூறி சபதத்தில் வென்றார். அவரது நினைவைப் போற்றும்விதமாக இந்த விழா நடைபெறுகிறது. விழாவுக்கு திருவடிக்குடில் சுவாமிகள் தலைமை தாங்குகிறார்.

 இதில் ஏராளமான ஆன்மிக அன்பர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொள்கிறார்கள். கும்பகோணம் பகுதி, திருக்குளங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நீதிமன்றங்கள் வாயிலாக  நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் சமூக ஆர்வலர் யானை ராஜேந்திரனுக்குப் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!