வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (12/04/2018)

கடைசி தொடர்பு:07:16 (12/04/2018)

`அடுத்த மாதம் தொடங்க வேண்டிய அட்மிஷன் இப்போதே க்ளோஸ்' - அசத்தும் அரசுப் பள்ளி!

தனியார் பள்ளி மோகத்தால் படையெடுக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விண்ணப்பம் வாங்குதற்காகக் காத்திருக்கும் பெற்றோர்கள் என்றெல்லாம் செய்திகள் படித்திருக்கிறோம். எப்படியாவது யாரைப்பிடித்தாவது தன் பிள்ளையை அந்த தனியார் பள்ளியில் சேர்த்து விட்டாலே போதும் அதுவே தன் வாழ்நாள் லட்சியமாகக் கருதும் பெற்றோர்கள்தான் தற்போது அதிகமாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் காலத்தில் ஓர் அரசுப்பள்ளி 2018-2019 கல்வி ஆண்டுக்கான அட்மிஷன் இல்லையென்று பள்ளிக்கு வெளியே போர்டு வைத்திருக்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யமாகத்தானே இருக்கும்.

கரைக்குடி அரசு பள்ளி


சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி காரைக்குடி நகராட்சிப் பள்ளியாகும். இங்கு `6-ம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வியில் 50 மாணவர்களும், 6-ம் வகுப்பு தமிழ்வழிக் கல்வியில் 35 மாணவர்களும் மட்டுமே சேர்க்க இடவசதி உள்ளது. மேலும், பிற வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க இயலாத நிலையில் உள்ளோம் என்பதைக் கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்குப் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என்று விளம்பரப் பலகை வைத்திருப்பதைப் பார்த்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் மல்லுக்கு நிற்கிறார்கள்.

கூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் எல்லாம் பற்றாக்குறையாக இருப்பதால், அட்மிஷன் போட முடியாமல் அவதிப்பட்டுப் வருகிறார் தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா. தனியார் பள்ளிக்குப் போட்டியாக தமிழ், ஆங்கிலத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை இங்கு வெளிக்காட்டி வருகிறார்கள். ஆகையால், பெற்றோர்கள் இந்த அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக எம்.எல்.ஏ, எம்.பி சிபாரிசு கடித்தைப் பெற்றுக்கொண்டு வந்து குவிகிறார்கள். ஆனால், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் இந்த அரசுப் பள்ளியை முடக்கி வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் அடிப்படை வசதிகள், இடவசதி குறைவுகள். நகராட்சி ஆணையர் இந்தப் பள்ளி வளர்ச்சி பெறுவதை விரும்பவில்லை என்கிற குற்றச்சாட்டை பெற்றோர்கள் முன் வைக்கிறார்கள். இதே அரசுப்பள்ளியில்தான் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க