`துணைநிலை ஆளுநர்களின் சம்பளம் இரு மடங்கு உயர்வு' - மத்திய அரசு அறிவிப்பு!

ஏழு யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களின் சம்பளத்தை ரூ.2.25 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ழு யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களின் சம்பளத்தை ரூ.2.25 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களின் சம்பளத்தை உயர்த்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்கள் சம்பளம் உயர்வு

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மத்திய அரசின் செயலாளருக்கு இணையான சம்பளத்தை யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்கள் இதுவரை பெற்று வந்த சம்பளமான 80 ஆயிரம் ரூபாயை 2 மடங்கு அதிகமாக்கி ரூ.2.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இது தவிர, அகவிலைப்படி மற்றும் உள்ளூர் படியாக மாதம் ரூ.4000 வழங்கப்படும். படியை தவிர்த்து துணைநிலை ஆளுநர் பெறும் சம்பளம் மாநில ஆளுநர் பெறும் சம்பளத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது’ எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் ஆகியோரின் சம்பளம் 2 மாதத்துக்கு முன் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில், டெல்லி, சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டையூ மற்றும் டாமன், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய ஏழு யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் இந்த சம்பள உயர்வில் பயன்பெறுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!