Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`சீரியல்களில் தொடரும் பிரச்னை' – சின்னத்திரை இயக்குநர்களுக்கு விஷால் கொடுத்த அட்வைஸ்!

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தேர்தல் சில நாள்களுக்கு முன் நடந்தது. மூன்று அணிகள் போட்டியிட்ட தேர்தலில், தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என அத்தனை பதவிகளையும் ஒருசேர அள்ளி சாதனை படைத்திருக்கிறது, கடந்த இரு ஆண்டுகளாக பொறுப்பிலிருந்த ‘பேரழகி’ இயக்குநர் தளபதி தலைமையிலான அணி. சின்னத்திரை அமைப்புகளின் தேர்தல் வரலாற்றில், எதிரணி ஆள் ஒருவர் கூட இல்லாமல் வென்றது இதற்கு முன் நடந்திராதது என்கிறார்கள்.

சின்னத்திரை இயக்குநர்கள்

வாழ்த்துச் சொல்லி தளபதியிடம் பேசினோம். ‘’ஆயிரம் உறுப்பினர்கள் இருக்காங்க. 2016-ல் நாங்க பொறுப்புக்கு வந்தப்ப, 1,05,000 ரூபாய் கடன்ல இருந்தது சங்கம். நன்கொடை திரட்ட முடிவு பண்ணி 23 லட்சம் திரட்டி, கடனை அடைச்சுட்டு இன்னைக்கு தன்னிறைவோட இயங்கிட்டிருக்கு சங்கம்.

நடிகர் சங்கத்துல எப்படி பெரிய கல்லூரிகள், மருத்துவமனைகளோட டை-அப் வச்சுகிட்டு உறுப்பினர்களின் குடும்பத்துக்கு கல்வி, மருத்துவ வசதிகள் செய்து தர்றாங்களோ, அதேபோல நாங்களும் எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி, எஸ்.ஆர்.எம். குரூப்புடன் சேர்ந்து எங்க சங்க உறுப்பினர்களோட குடும்பங்களுக்கு இந்த வசதிகளைச் செய்து தந்தோம். உறுப்பினர்களின் தொழில் சார்ந்த பிரச்னைகள்ல தீர்வுகளை எட்டியிருக்கோம். முக்கியமா நாங்க பொறுப்புக்கு வர்றதுக்கு முன்னாடி என்னென்ன வாக்குறுதிகள் தந்தோமோ அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றித் தந்தோம். அதனாலேயே, உறுப்பினர்கள் மறுபடியும் எங்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்க’’ என்கிறார்.

விஷால்

’சீரியல் இயக்குநர்களுக்கு இன்னைக்கு உள்ள பெரிய பிரச்னையாக எதைச் சொல்கிறீர்கள்’? 

நீங்க சீரியல்கள்ல அடிக்கடி பார்க்கறீங்களே, ‘இவருக்குப் பதில் இவர்’னு அந்த ஆள் மாற்ற விஷயம்தான் பெரிய விவகாரமா இருக்கு.

விஷால்

சீரியல்ல நடிக்கிற ஆர்ட்டிஸ்டுகளை நீங்கதானே மாத்துறீங்க? 

‘வெளியில தெரியறது இப்படித்தான். அதுவும் போக ஆர்ட்டிஸ்டுகள் மாறுவது மட்டுமே உங்களுக்குத் தெரியும். சீரியலோட இயக்குநர், உதவி இயக்குநர்களையே மாத்தறாங்களே, கேள்விப்பட்டிருக்கீங்களா? தயாரிப்பாளர், சேனல்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை இது. சில சீரியல் புரடியூசர்கள் இஷ்டத்துக்கு இயக்குநர்களை மாத்தறாங்க. இதைத் தடுக்க, இந்த விஷயத்துல சேனல்களோட ஒத்துழைப்பைப் பெற்றுத் தர திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கத் தலைவர் நாசரைச் சந்திச்சு ஆதரவு கேட்டிருக்கோம். கலந்து பேசி சுமுகத் தீர்வு காணலாம்னு விஷால் உறுதி தந்திருக்கார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement