வெளியிடப்பட்ட நேரம்: 10:21 (12/04/2018)

கடைசி தொடர்பு:17:12 (12/04/2018)

`லெஜெண்ட் திருவள்ளுவர்!’ - திருக்குறளுடன் உரையை நிறைவு செய்த மோடி #DefenceExpo #LiveUpdates


*
சென்னை அடையாறு புற்றுநோய் மைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசி வருகிறார்.
 

மோடி தமிழகத்துக்கு புகழாரம்...

`தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’ 

என்னும் திருக்குறளை மேற்கோள்காட்டி தன் உரையை நிறைவு செய்தார் மோடி. 

 

 

 

*இறுதியில் ‘லெஜெண்ட் திருவள்ளுவர்’ என்று திருவள்ளுவருக்கு புகழாரம்  சூட்டினார். 

*ராணுவ கண்காட்சியை முறைப்படி துவங்கிவைத்த மோடி,  காலை வணக்கம் என்று தமிழில் பேசி உரையைத் தொடங்கினார். ‘ ராணுவ தளவாட கண்காட்சிக்கு வருகை தந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். முதன்முறையாக இந்திய நாடுகளில் தயார் செய்யப்பட்ட ராணுவ தளவாட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. உலகுக்கு அகிம்சையைப் போதித்த நாடு நமது நாடு’ என்றார். 

*இந்திய நாகரீகத்தை வர்த்தகம் மற்றும் கல்வியில் வாயிலாக  ஏற்படுத்திய சோழர்களின் மண்ணில் நின்று பேசுவதில் மகிழ்ச்சி. 

*மிக சிறந்த மாநிலமான காஞ்சிபுரத்தில் ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது.

 *இந்தக் கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 150 நாடுகளின் பிரதிநிதிகளும் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.  

மோடி

ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு புகழாரம்...

*ராணுவ தளவாட கண்காட்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், `தமிழகத்தில் முதல்முறையாக ராணுவ கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி. இந்தக் கண்காட்சி பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா கனவை நனவாக்கும். இந்த ராணுவ தளவாடக் கண்காட்சி வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி.  தமிழகம், தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தைக் கொண்டுள்ளது. மேலும், தமிழகத்தில் தொழில்புரிய எளிய நடைமுறைகளுக்கான திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது’ என்றார். 

மோடி

*திருவடந்தையில் ராணுவ கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் ராணுவ கண்காட்சி தொடங்கியது.

*இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா, தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

*கண்காட்சி நடக்கும் வளாகத்தினுள் முறையான அனுமதி பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். 

மோடி


*கோவை , திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து கண்காட்சிக்கு வந்த பா.ஜ.க-வினர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பா.ஜ.க கொடியுடன் கண்காட்சி நடக்கும் வளாகத்தின் வெளியே சிறிது நேரம் காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.  

*வெளிநாட்டினர் சிலர் முறையான அனுமதிச்சீட்டு பெறாததால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

* பிரதமர் நரேந்திர மோடி, கண்காட்சி நடக்கும் இடத்துக்கு வருகை தந்தார்.

*கறுப்பு டி-ஷர்ட் அணிந்தவர்கள் கண்காட்சி நடக்கும் வளாகத்தினுள் அனுமதிக்கப்படவில்லை. 

மோடி
 

காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தைப் பகுதியில், இந்திய பாதுகாப்புத்துறை சார்பாக 'பாதுகாப்புக் கண்காட்சி 2018' தொடங்கியது.  வரும் 14-ம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல், கொரியா, ஸ்வீடன் உள்ளிட்ட 42 நாடுகள் இதில் கலந்துகொள்வதாக அறிவித்திருந்தன. இந்தியாவை உலகின் முக்கிய பாதுகாப்பு உற்பத்தி மையமாகக் காட்சிப்படுத்துவதே பாதுகாப்புக் கண்காட்சியின் நோக்கமாகும். இந்தக் கண்காட்சியில், உள்நாட்டுத் தொழிற்சாலைகள் தங்களது உள்நாட்டு உற்பத்தித் தடவாளங்களையும், பகுதிப் பொருள்களையும் காட்சிக்கு வைத்துள்ளன. இதற்காக, கிழக்குக் கடற்கரைச் சாலை அருகில் 400 ஏக்கர் நிலம் தேர்வுசெய்யப்பட்டு, ரூ.463 கோடி செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பிரமாண்ட கண்காட்சி அரங்குகள், கடலில் நடக்கும் சாகசங்களைப் பொதுமக்கள் பார்ப்பதற்காக, பார்வையாளர் மாடங்கள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள், கடந்த ஒரு மாதமாக நடைபெற்றன. சுமார் 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கண்காட்சி நடைபெறுகிறது. கடந்த சில தினங்களாகவே பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி, மும்பை, டேராடூன் ஆகிய இடங்களிலிருந்து பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை ராட்சத கன்டெய்னர் லாரிகள்மூலம் கொண்டுவந்துகொண்டிருக்கிறார்கள். சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்புப் படையினர், கண்காட்சி வளாகம் முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்திவருகிறார்கள். 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள்மூலம்  வளாகம் கண்காணிக்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க