`தயவுசெய்து செயல்படுங்கள்..!' - பிரதமர் மோடிக்கு கமல் கோரிக்கை

'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தயவுசெய்து செயல்படுங்கள்' என்று பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடியை வலியுறுத்தும் விதமாக வீடியோ ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில்,  'ஐயா, வணக்கம். இது கமல்ஹாசன். நான் உங்கள் குடிமகன். இது, மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பித்தரும் திறந்த வீடியோ. தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாதது அல்ல.

தமிழக மக்கள் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், செயல்படுத்தவேண்டியது உங்கள் கடமை. பாமரர்களும் பண்டிதர்களும் இந்தத் தாமதம், கர்நாடகத் தேர்தலுக்காகத்தான் என்று நம்பத்தொடங்கிவிட்டார்கள். அது, ஆபத்தானது. அபாயகரமானதும்கூட. இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். தமிழர்களுக்கும் கன்னர்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க நீங்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆகவேண்டும். அது உங்கள் கடமை. நினைவுறுத்தவேண்டியது என் உரிமை. இந்த வீடியோவில் சொல்ல மறந்ததை கடித வடிவில் அனுப்புகிறேன். தயதுசெய்து செயல்படுங்கள். இந்த நிலை மாற வழி செய்யுங்கள். வணக்கம். வாழ்க இந்தியா, நீங்களும் தான்' என்று பேசியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!