வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (12/04/2018)

கடைசி தொடர்பு:12:30 (12/04/2018)

கலிங்கப்பட்டியில் எங்கு பார்த்தாலும் கறுப்புக்கொடி!

பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெர்விக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் கருப்புக் கொடியேற்றுமாறு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றப்பட்டுள்ளது. பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெர்விக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் கருப்புக் கொடியேற்றுமாறு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றப்பட்டுள்ளது. பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெர்விக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் கருப்புக் கொடியேற்றுமாறு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றப்பட்டுள்ளது. பிரதமர் வருகைக்கு எதிர்ப்புத் தெர்விக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் கருப்புக் கொடியேற்றுமாறு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடியேற்றப்பட்டுள்ளது.

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள வீடுகளில் கறுப்புக் கொடியேற்றுமாறு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடியேற்றப்பட்டுள்ளது.

கலிங்கப்பட்டி வைகோ வீடு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உடனடியாக வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாகத் தி.மு.க செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகம் வருகை தரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடிப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கறுப்புக்கொடியேற்றி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். பாளையங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், தனது சட்டமன்ற அலுவலகம் முன்பாகக் கறுப்புக் கொடியேற்றினார். அத்துடன், அந்தப் பகுதியில் உள்ள வீடுகள், நெல்லை டவுனில் உள்ள அவரது வீடு மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், தென்காசி, பாவூர்சத்திரம், கடையநல்லூர், வீரவநல்லூர், ராதாபுரம், வள்ளியூர் எனப் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியுள்ளனர். தெருக்களிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோவின் சொந்த கிராமமான கலிங்கப்பட்டி முழுவதும் கறுப்புக்கொடியாகக் காட்சியளிக்கிறது. 

கலிங்கப்பட்டி - தெருவெங்கும் கருப்பு

கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ள வைகோவின் வீட்டில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன், அங்குள்ள தெருக்களில் மட்டும் அல்லாமல் தங்களின் வீடுகளிலும் மக்கள் கறுப்புக்கொடியேற்றி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இது பற்றி அந்தக் கிராமத்தினர் கூறுகையில், `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளது. அதனால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு எங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவே கறுப்புக்கொடி ஏற்றியுள்ளோம்’ எனத் தெரிவித்தனர்.