Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேற்று மத்திய அரசு ஊழியர்.. இன்று திருடன்  - சென்னையில் கலங்கடித்த சம்பவம் 

திருட்டு

சென்னையில், ரயில்வே ஊழியர் ஒருவர் கத்தியைக் காட்டி வழிப்பறிசெய்ய முயன்றுள்ளார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

சென்னை முகப்பேர் கிழக்கு, சீதக்காதி மெயின் சாலையில் அடகுக்கடை நடத்திவருபவர், மங்கல்சந்த். இவரது மகன் தேவிலால். சம்பவத்தன்று, மங்கல்சந்த் கடையில் இருந்தபோது டூவீலரில் வந்த வாலிபர், நகைகளை அடகுவைக்க வேண்டும் என்று பேசியுள்ளார். அதுதொடர்பாக விசாரித்துள்ளார். அப்போது, திடீரென கத்தியை எடுத்து மங்கல்சந்த்தின் கழுத்தில் வைத்த வாலிபர், பணம் கேட்டு மிரட்டத் தொடங்கினார். இதை சற்றும் எதிர்பாராத மங்கல்சந்த், அதிர்ச்சியில் உறைந்தார். இந்தச் சமயத்தில், 'திருடன்... திருடன்...' என்று மங்கல்சந்த் அலறினர்.

 சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். அவர்களைப் பார்த்த வாலிபர், டூவிலரை எடுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்குக்  கொண்டுசென்று விசாரித்தனர். அவரது பெயர், உமர்கான் சர்மா என்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர், தென்னக ரயில்வேயில் கிளர்க்காகப் பணியாற்றுகிறாராம். கடந்த எட்டு மாதங்களாக உமர்கான் சர்மா சரிவர வேலைக்குச் செல்லவில்லையாம்.  அதனால், வறுமையில் வாடிய உமர்கான், வழிப்பறிசெய்யத் திட்டமிட்டுள்ளார். அப்போது அவர் மாட்டிக்கொண்டார். இவர், சென்னை முகப்பேரில் குடியிருந்துவருகிறார். வழிப்பறிசெய்யப் பயன்படுத்திய கத்தி, டூவீலர் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல்செய்தனர். 
  
 ரயில்வே ஊழியர் வழிப்பறிசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement