`சிதம்பரத்துக்கு எதிராகச் சாட்சி சொன்னதால் என் உயிர் ஊசலாடுகிறது' - கதறும் இந்திராணி 

இந்திராணி போலீஸாரிடம் கொடுத்த கடிதத்தில் பரபரப்பான தகவல்

`சிதம்பரத்துக்கு எதிராகச் சாட்சி சொன்னதால் என் உயிர் ஊசலாடுகிறது' - கதறும் இந்திராணி 

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் முறைகேடாக வெளிநாட்டு நிதி திரட்டியதை மறைப்பதற்காக ரூ.6 கோடி வரை பணம் பெற்றதாகக் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்தது.

தற்போது கார்த்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கார்த்தியின் கைதுக்கு ஐ.என்.எக்ஸ் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான இந்திராணி சி.பி.ஐ-யிடம் கொடுத்த வாக்குமூலமே காரணம் என்று சொல்லப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன், மகளை (ஷீனா போரா) கொலை செய்த வழக்கில் இந்திராணியும் அவரின் கணவர் பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் இந்திராணி அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்திராணியின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. மும்பை ஜே.ஜே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நேற்று மீண்டும் அவர் சிறை திரும்பினார். 

இந்திராணி முகர்ஜி

வெள்ளிக்கிழமை benzodiazepine எனப்படும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் எடுத்துக்கொண்டதால் சிறையில் இந்திராணி நினைவின்றி கிடந்ததாகச் சொல்லப்பட்டது. மருத்துவமனையில் மும்பை நாக்பாடா போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

போலீஸாரிடம் இந்திராணி கைப்பட எழுதி கொடுத்த கடிதத்தில், ''வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். மீண்டும் சிறை திரும்பிய நான், சிறிது பருப்பு மட்டும் சாப்பிட்டுவிட்டு, சிறை ஊழியர் கொடுத்த மாத்திரையைச் சாப்பிட்டேன். அதற்குப் பிறகு, என்ன நடந்தது என்றே தெரியவில்லை. 31 மாதங்களாக இந்தச் சிறையில் நான் அடைபட்டுக் கிடக்கிறேன். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி ஆகியோருக்கு எதிராகச் சி.பி.ஐ-யிடம் வாக்குமூலம் அளித்த பின் என் உயிருக்குப் பாதுகாப்பில்லை. என்னை பாதுகாப்பான சிறைக்கு மாற்றுங்கள் அல்லது ஜாமீன் வழங்குங்கள்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!