வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (12/04/2018)

கடைசி தொடர்பு:15:17 (28/06/2018)

கர்நாடகா வங்கிமீது கறுப்பு மை வீசி தமிழ் தேசிய கட்சியினர் போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் கர்நாடகா வங்கி மீது கறுப்பு மை வீசி போராட்டம்

BANK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழ் தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள்,  தஞ்சாவூரில் உள்ள கர்நாடக வங்கியில் கறுப்பு மை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் தமிழகத்தில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், இன்று தமிழகம் வந்த மோடிக்கு கறுப்புக்கொடி காட்டியும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், அமைப்புகளும் பலத்த எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர்.

போராட்டம்

இந்த நிலையில், தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள கர்நாடகா  வங்கிக்கு ,காவிரிப் போராட்டம் தொடங்கியதிலிருந்தே தடுப்புகள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சியினர்  கர்நாடக வங்கிக்கு முன் கூடினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழ் தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள், தஞ்சாவூரில் உள்ள கர்நாடக வங்கியில் கறுப்பு மை வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கர்நாடக வங்கியின் பெயர்ப் பலகை மற்றும் முகப்பில் கறுப்பு மையை வீசி அடித்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். ஆனாலும், அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், கர்நாடகா மாநிலத்துக்கு எதிராகவும் கடுமையான கோஷங்களை எழுப்பி, கறுப்பு மையை வீசி அடித்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க