ஊழலில் சிக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் 21 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் தொடர்பாக, அந்த வங்கியைச் சேர்ந்த 21 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்
மட்டுமல்லாது, மேலும் பல அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மேத்தா தெரிவித்துள்ளார். 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த சுமார் 11,400 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, சிபிஐ ஒருபுறம் வழக்குப்பதிவு செய்து வந்தாலும், அந்த வங்கியின் உள்மட்ட அளவிலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விசாரணையில், இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாக 21 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ''தொடர்ந்து விசாரணை நடந்துவருவதாகவும், மேலும் பல அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் சுனில் மேத்தா தெரிவித்துள்ளார். 

இந்த ஊழல் தொடர்பான வழக்கில், இதுவரை 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்‌ஷி ஆகியோர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.      

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!