Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரு தரப்பினர் மோதல், கல்வீச்சு... போர்க்களமான புதுச்சேரி பா.ஜ.க உண்ணாவிரதம்

பா.ஜ.க-வினருக்கும், கறுப்புக் கொடி ஏந்தி வந்த மக்கள் அதிகாரம் உள்ளிட்ட சமூக அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், புதுச்சேரியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக

நாடாளுமன்றத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 6-ம் தேதி நிறைவடைந்தது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டம், நீரவ் மோடியின் வங்கி மோசடி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கின. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, கர்நாடகாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார். அதேபோல, அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

புதுச்சேரி

அதன்படி, புதுச்சேரியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் சுதேசி மில் எதிரில் அக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருந்தனர். அதேபோல, பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கறுப்புக்கொடி ஏந்தியும், மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் பேரணியாகச் சென்றனர். நெல்லித்தோப்பு சிக்னலில் தொடங்கிய இந்தப் பேரணி, தலைமைத் தபால் நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பா.ஜ.க கட்சியினர் உண்ணாவிரதம் இருந்த மேடையைக் கடக்கும்போது, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுச்சேரி

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கடும் மோதலாக மாறியதால், இரு தரப்பினரும் கற்கள், நாற்காலிகள் மற்றும் கட்டைகளைக் கொண்டு கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். அதன் காரணமாக, அந்தப் பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்தது. அதையடுத்து, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினரைக் காவல்துறை கைதுசெய்தது. அப்போது, அங்கு செய்தி சேகரித்துக்கொண்டிருந்த செய்தியாளர்கள் சிலரும் இந்தச் சம்பவத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement