வெளியிடப்பட்ட நேரம்: 15:48 (12/04/2018)

கடைசி தொடர்பு:16:07 (12/04/2018)

“பாரதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலைமுயற்சி வழக்கு பதிய வேண்டும்” - ஹெச்.ராஜா காட்டம்

ஐ.பி.எல் போராட்டம் என்றுக் கூறி வன்முறை தூண்டியதுக்காக சீமான் மட்டுமல்லாது பாரதிராஜா, அமீர், கௌதமன் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா

கடந்த ஏப்ரல் 10-ம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, சென்னையில் நடந்த ஐ.பி.எல் போட்டிக்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நடந்த போராட்டத்தில் கிரிகெட் ரசிகர்களும் காவல்துறையினரும் தாக்கப்பட்டனர். அவர்கள் தாக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 21 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.

இது குறித்து தற்போது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள பா.ஜ.க தேசிய செயலர் ஹெச்.ராஜா, “ஐ.பி.எல்-க்கு எதிரான போராட்டம் என்று வன்முறையைத் தூண்டி பேசியவர் சீமான் மட்டுமல்ல. வைரமுத்து, பாரதிராஜா, கௌதமன், அமீர், திருமுருகன் காந்தி, திருமாவளவன் ஆகிய அனைவருமே. எனவே, இவர்கள் அனைவர் மீதும் கொலை முயற்சி வழக்கு தொடரப்பட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், காவிரி உரிமை மீட்பு நடைப் பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டாலின் பற்றி கருத்து தெரிவித்துள்ள இவர், “1967-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், இன்று காவிரியில் ஸ்டாலின் மேடை போட்டு பொதுக்கூட்டம் பேசுகிறார். காவிரி வறண்டு போயுள்ளதுக்கு மோடி அரசு காரணமா. ஸ்டாலின் நடை பயணம் ஏமாற்று வேலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.