Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் அனைத்துக் கிராமிய கலைஞர்கள், பறை, நையாண்டி மேளம், நாதஸ்வரம் இசைத்து பாட்டுப் பாடி, பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல் இசைக் கருவிகளை இசைத்தும் போராட்டம் நடத்தினர்.

காவிரிக்காக கிராமிய கலைஞர்கள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் உடனே அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்காகச் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிகெட் போட்டியின்போதும், இன்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அனலாகத் தவிக்கிறது தமிழகம். இதற்காக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் தண்ணீருக்காகத் தவிக்கும் காவிரிக்காகவும் அதற்கான நீதி நிரந்தரமாகக் கிடைக்கவும் போராடி வருகின்றனர்.

தஞ்சாவூரில் தமிழ்நாடு கிராமியக் கலைஞர்கள் நடன நையாண்டி மேள சங்கம், அனைத்து கிராமியக் கலைஞர்கள் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம் நடத்தினர். இதில் பல கலைஞர்கள் கலந்துகொண்டு பறை, நையாண்டி மேளம், நாதஸ்வரம் இசைத்து, அமைத்திடு, அமைத்திடு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு எனப் பாட்டு பாடினர். பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போலவும் இசைக் கலைஞர்கள் இசைக் கருவிகளில் இசை அமைத்தனர்.

காவிரிக்காக கிராமிய கலைஞர்கள் போராட்டம்

பின்னர் போராட்டப் பந்தலில் இசைக் கருவிகளை வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது, மண்ணின் கலையையும் கலாசாரத்தையும் பாதுகாத்து வந்த தமிழகம் தற்போது காவிரி தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களைப்போல, வறண்டு வெடித்த நிலத்தில் எதிர்காலத்தை நினத்து கலங்கி நிற்கிறார்கள். காவிரியில் தண்ணீர் வந்தால்தான் விவசாயம் செழிக்கும். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவார்கள். அப்போதுதான் எங்களுக்கும் எங்களை வாழவைக்கும் கலைக்கும் இசைக் கருவிகளுக்கும் வேலை கிடைக்கும். காவிரி மண்ணோடு சேர்ந்து தமிழகத்தின் கலையும் கலாசாரமும் வளரும். எனவே, காவிரிக்கான நீர் மட்டும் இல்லை; நீதியும் உடனே கிடைக்க வேண்டும் எனப் போராட்டம்  நடத்தினார்கள்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement