ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!

கள்ளழகர்

ஒவ்வொரு வருடமும் சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மதுரையில் சித்திரைத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 12 நாள்கள் சித்திரைத் திருவிழா நடைபெறும். இதைத் தொடர்ந்து அழகர் கோயில் கள்ளழகர் மூலஸ்தானத்திலிருந்து மேற்குப் புறம் காணப்படும் தாயார் சந்நிதி அருகே காணப்படும் பல்லக்கில் எழுந்தருளுவார். பிறகு 18-ம் படி கருப்பணசாமி மண்டபத்தில் வாணவேடிக்கை முழங்க மதுரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வருடா வருடம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 


கள்ளழகர்


இந்தநிலையில், வைகை ஆற்றில் அழகர் ஏப்ரல் 30-ம் தேதி இறங்குவார் என்று அழகர்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இந்த வருடம் ஏப்ரல் 30-ம் தேதி அதிகாலை 5.45 முதல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவார் என அழகர்கோவில் நிர்வாகத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!