`சூரப்பா நியமனத்தை ஏற்க முடியாது!’ - போர்க்கொடி தூக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கர்நாடகவை சேர்ந்த சூரப்பாவை

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதை ஏற்க முடியாது என அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். 

 

சூரப்பாவை எதிர்க்கும்

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகக் கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் நியமனம் செய்திருப்பதை எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள், பொதுநல அமைப்பினர்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசையும் எதிர்த்து தமிழகத்தில் தீவிரமான போராட்டங்கள் நடந்துவரும் வேளையில் ஆளுநரின் இந்த நியமனம் மக்களைக் கோபப்படுத்தியுள்ளது. அவருடைய அதிகாரத்தின் அடிப்படையில் செய்துள்ளார் என்று ஆளுநரின் இந்த உத்தரவை தமிழக அரசு வேறு வழியில்லாமல் ஆதரித்துள்ளது. 

இந்த நிலையில், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ராஜன்செல்லப்பா சூரப்பா நியமனத்தைக் கடுமையாக எதிர்த்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம், "கர்நாடகவை சேர்ந்த சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவி ஏற்கக் கூடாது. இது சம்பந்தமாக நான் சூரப்பாவுக்கே கடிதம் எழுதியுள்ளேன். அதை மீறி பொறுப்பேற்றால் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், தொழில்நுட்ப மையங்களை உள்ளடக்கிய இப்பல்கலைக்கழக நிர்வாகத்தை மாணவர்கள், அலுவலர்கள் ஒத்துழைப்பின்றி அவரால் திறமையாக நிர்வகிக்க முடியாது. தமிழகத்தைச் சேர்ந்த சிறந்த கல்வியாளர் ஒருவரை துணைவேந்தராக நியமிக்க வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!