தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி போராட்டம் தீவிரம்!

தமிழகம் முழுவதும் கறுப்புக் கொடி போராட்டம் தீவிரம்!

பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டும் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பலூன்

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் கொந்தளித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். தமிழகம் வந்த பிரதமருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்ட அரசியல் கட்சியினர் முடிவெடுத்தனர். சென்னை விமான நிலையத்தைக் கறுப்புச்சட்டை அணிந்து பல்வேறு கட்சித் தொண்டர்கள் முற்றுகையிட்டனர். வீடுகளில் கறுப்புக்கொடி பறக்கவிடுவது, கறுப்புச் சட்டை அணிவது, கறுப்பு பலூன்களைப் பறக்கவிடுவது, கறுப்புக் கொடி காட்டுவது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும், #gobackmodi என்ற ஹேஸ்டேக், சமூக வலைதளங்களில் உலகம் அளவில் ட்ரெண்ட் ஆனது. 

போலீஸார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் தமிழகத்தில் எழுந்துள்ள `கறுப்பு'ப்போராட்டத்தைத் தடுக்க முடியவில்லை. தமிழகத்தின் 94 வயது மூத்த தலைவர் கருணாநிதி வீடு முதல் பொதுமக்கள் வீடுகள் வரை கறுப்புக் கொடிகள் பறந்தன. சிறுவர் - சிறுமியர் கூட கறுப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, கறுப்புச்சட்டை அணிந்து கையில் கறுப்புக்கொடி வைத்திருக்கும் குழந்தை ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 'தமிழகத்தின் மூத்த தலைவர் முதல் பிறந்த குழந்தை வரை மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இனிமேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் மோடி தாமதிக்கக் கூடாது'' என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!